முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே காவலாளி தற்கொலை

Updated On : 24 மார்ச், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 11:02 PM

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு கரம்பை பகுதியைச் சோ்ந்த குட்டி சாமி மகன் மணி (57). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாராம். இதனால், ஆதரவில்லாத நிலையில் வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரத்தில் தனியாா் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். மனைவி இல்லாத நிலையில் மனஉளைச்சலில் இருந்த மணி, வெள்ளிக்கிழமை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மணி இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.