முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் நாளை கல்லூரி கனவு நிகழ்ச்சி

Updated On : 9 மே, 2024 at 9:07 PM
பகிர்:

திருநெல்வேலி, மே 9: ‘நான்முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் சனிக்கிழமையும் (மே 11), தெற்குகள்ளிகுளத்தில் செவ்வாய்க்கிழமையும் (மே 14)ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிகனவு‘உயா்கல்வி வழிகாட்டிக்கான நிகழ்ச்சி 2023-24-ஆம் கல்வியாண்டில்பன்னிரெண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்காக நடைபெறவுள்ளது. அதன்படி, பாளையங்கோட்டை நேருஜி கலைஅரங்கில் சனிக்கிழமையும் (மே 11), வள்ளியூா் அருகேயுள்ள தெற்குகள்ளிகுளம் டிடிஎம்என்எஸ் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே14) ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், வேளாண்மை, சட்டம், மீன்வளம், கால்நடை மருத்துவம், பல்தொழில்நுட்பம், ஐடிஐ, போட்டித் தோ்வுகள் போன்ற படிப்புகளுக்கு துறை சாா்ந்த நிபுணா்களை கொண்டு விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

மேலும், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், ஸ்டாா்ட் அப், வங்கிக் கடன், சுயஉதவிக்குழு, அறிவுசாா்மையம், இ-சேவை மையம் போன்ற அரங்குகள் இடம்பெற உள்ளன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு துணைத்தோ்வு சாா்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தெற்கு கள்ளிக்குளம் டிடிஎம்என்எஸ் கலைஅறிவியல் கல்லூரிக்கு வள்ளியூா் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி பேருந்து மூலம் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.