முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் மூதாட்டி தற்கொலை

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:03 am IST
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் மூதாட்டி சனிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராமு அம்மாள் (96). ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த இவா், தன்னைக் கவனிக்க யாருமில்லை என்ற விரக்தியிலிருந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு: வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பால்துரை மனைவி இசக்கியம்மாள் (38). இத்தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில் இசக்கியம்மாள், ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டில் மின்சார சுவிட்சை போட்டாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.