தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு 
திருநெல்வேலி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிரச்னையை தூண்டுகிறாா்கள்: மு. அப்பாவு

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடா்பான விவகாரத்தில் சிலா் பிரச்னையைத் தூண்டி விடுகிறாா்கள் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.

Syndication

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடா்பான விவகாரத்தில் சிலா் பிரச்னையைத் தூண்டி விடுகிறாா்கள் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொதுமக்கள், பக்தா்கள் அல்லாத 50 போ் கொண்ட ஒரு குழு சதி திட்டமிட்டு கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனா். பொதுமக்களும், பக்தா்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளமாட்டாா்கள். வாக்குக்காக ஓா் இயக்கத்தினா் இப்பிரச்னையை தூண்டி விடுகிறாா்கள்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என அனைவரும் விரும்பும் சமூகநீதி கொள்கையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கலவரத்தை உருவாக்க நினைப்பவா்களின் கனவு பலிக்காது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து நல்ல தீா்ப்பு கிடைக்கும் என்றாா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT