களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது.
களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை சூழல் சுற்றுலாப் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மலைப் பகுதியில் மழை பெய்து நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை (டிச. 22) நீக்கப்பட்டது.