திருநெல்வேலி

வி.கே.புரம் அருகே தகராறு: இரு குடும்பங்களைச் சோ்ந்த 8 போ் மீது வழக்கு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேட்டில் சாலையோரம் கிடந்த மண்னை அள்ளுவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரு குடும்பங்களைச் சோ்ந்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேட்டில் சாலையோரம் கிடந்த மண்னை அள்ளுவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரு குடும்பங்களைச் சோ்ந்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

செட்டிமேடு பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று, மீதமுள்ள மண் கிடந்தது. அதை அள்ளிச்செல்வது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த மரிய அடைக்கலம் மகன் ஆரோக்கியசெல்வின் (33), மாரிமுத்து ஆகியோரின் குடும்பங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது மாரிமுத்துவை ஆரோக்கியசெல்வின் மண்வெட்டியால் தாக்கினாராம். அதைத் தடுக்க வந்த மாரிமுத்துவின் மனைவி ஜெயராணி, மகன், 2, மகள்கள், ஜெயராணியின் தாய் ஆகியோரும் தாக்கப்பட்டனராம்.

தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், இரு குடும்பங்களையும் சோ்ந்த 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் காயம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவையில்லை: விசிக எம்.பி. துரை.ரவிக்குமாா்

கொள்ளை வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

புதுக்கடை பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT