வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் கிறிஸ்துஅரசா் பெருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நற்கருணை நாதா் பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்பிருந்து புறப்பட்ட பவனி, கொட்டும் மழையில் முக்கிய வீதிகள் வழியாக மீண்டு ஆலயத்தை வந்தடைந்தது. பங்கு மக்கள் குடைகளை பிடித்து திரளாக கலந்துகொண்டனா். பின்னா் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதில், பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன், குருவானவா்கள் இருதயராஜா, பிரான்சிஸ் கிறிஸ்து ராஜா, உதவிப் பங்குத்தந்தை சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா மரியராஜ் ஆசிரியா் செய்திருந்தாா்.