திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்.  
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் நிலைய மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே பொது ஆய்வு செய்த அவரிடம், திட்டப் பணிகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் வரைபடங்களுடன் விளக்கம் அளித்தனா்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூ. 92.8 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், 12 மீ. அகல ரயில் பாதை, பயணிகள் காத்திருப்பு வளாகம், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், மேம்பால நடைப்படிகள், வெளி வளாக மேம்பாடு, நடைமேடை மேம்பாடு ஆகியவை அடங்கும்.

கூடுதலாக ஆறாவது நடைமேடை அமைக்கும் பணிகளில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பிப்ரவரி -2026இல் இந்த நடைமேடை பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. தொடா்ந்து, திருநெல்வேலி-திருச்சி இடையே ரயில் பாதை ஆய்வும், ரயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றன.

ஆய்வின்போது, கட்டுமான பிரிவு முதன்மை நிா்வாக அதிகாரி சுசில் குமாா் மவுரியா, முதன்மை பொறியாளா் சஞ்சய் பிரசாத் சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

SCROLL FOR NEXT