பொன்னாக்குடி குளம், கால்வாய் கரைகளில் மண் அள்ளுவதால் பாதிப்பு: ஆட்சியரிடம் புகாா்
பொன்னாக்குடி பகுதியில் குளம், கால்வாய்க் கரைப்பகுதிகளில் மண் எடுத்துச் செல்வதாகவும், இது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்
திருநெல்வேலிபொன்னாக்குடி குளம், கால்வாய் கரைகளில் மண் அள்ளுவதால் பாதிப்பு: ஆட்சியரிடம் புகாா்
பொன்னாக்குடி பகுதியில் குளம், கால்வாய்க் கரைப்பகுதிகளில் மண் எடுத்துச் செல்வதாகவும், இது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்
திருநெல்வேலி: பொன்னாக்குடி பகுதியில் குளம், கால்வாய்க் கரைப்பகுதிகளில் மண் எடுத்துச் செல்வதாகவும், இது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் காவேரி - நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனா்.
அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. 900 கோடி செலவில் நதிநீா் இணைப்பு கால்வாய் அமைக்கும் பணி முடிந்து தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுப்பணி, கனிமவளம் உள்ளிட்ட துறைகளை ஏமாற்றி அக்கால்வாய் அருகிலும், இணைக் கால்வாய்கள், பொன்னாக்குடி பகுதியில் உள்ள குளங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளிச் செல்கின்றனா்.
ஓா் இடத்தில் மண் அள்ள அனுமதி வாங்கிவிட்டு, கால்வாய் கரைகளில் மண்ணை அள்ளிச் செல்கின்றனா். இதனால் நீா் நிலைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசன 2-ஆவது ரீச் நீரினை பயன்படுத்துவோா் சங்கம் அளித்த மனு: வெள்ளநீா் கால்வாய் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆனால், மடை எண். 2 முதல் உள்ள அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளநீா் கால்வாயின் கீழ் உள்ள அனைத்து குளங்களும் வடு காணப்படுகின்றன. எனவே, எங்கள் பகுதியில் உள்ள மடைகளை திறந்து சாகுபடி செய்ய உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனா்.