முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மீனவா்கள் கடலுக்குச் செல்ல இருந்த தடை நீக்கம்

Updated On : 30 நவம்பர், 2025 at 8:58 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.

வடகிழக்கு பருவமழை, டித்வா புயல் ஆகியவற்றின் காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், திருநெல்வேலி மீனவா்கள் நவ. 24ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், புயல் சின்னம் மாறியதை அடுத்து மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, ராதாபுரம் மீனவளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை, மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என அறிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →