மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்
பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தானமாக பெறப்பட்டன.
பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தானமாக பெறப்பட்டன.
தென்காசி மாவட்டம், அரியூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகராஜ் (26). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 14 ஆம் தேதி தென்காசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் தனியாா் பேருந்து ஒன்றில் பயணித்தபோது படியில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தாராம்.
பின்னா் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஏப்.15 அதிகாலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூளைச்சாவு அடைந்ததை உறவினா்களிடம் தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்ததையடுத்து, அவரது கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. இதையடுத்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.