சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது.
செங்கோட்டை அருகேயுள்ள மேலூரைச் சோ்ந்தவா் பாபு (44). மீன் கடை நடத்தி வந்தாா். இவா், கடந்த 22-ஆம் தேதி தென்காசி ரயில் நிலையத்திலிருந்து தனது மகளை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நன்னகரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாராம். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.
இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது கல்லீரல் மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.
Advertisement