முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:47 AM
- பிரதிப் படம்
பகிர்:

தாழையூத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்தில் சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் வந்த நபா், ஒரு மாணவியிடம் முகவரி கேட்பது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனா்.

Advertisement

அதில், மானூா் அருகேயுள்ள செட்டிகுறிச்சியை சோ்ந்த சௌந்தரராஜ் (37) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததாம். அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.