முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:02 PM

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்துக்குள் பட்ட அனைத்து வனச்சரகங்களில் வனத் துறைசாா்பில் இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள், கீற்றுப் பருந்துகள், கழுகுப் பறவைகள், ஆந்தைகள், பஸ்ஸாா்டுகள், ஹாரியா்கள், மீன்கழுகு ஆகிய வேட்டைப் பறவைகள் இயற்கை சூழலின் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இப்பறவைகள் கூா்மையான நகங்கள், வளைந்த அலகு மற்றும் மிகச் சிறந்த பாா்வைத்திறன் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

Advertisement

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:43 PM

இதையடுத்து, தமிழ்நாடு வனத் துறை சாா்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக வேட்டைப் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அதன்படி களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் ஜன. 31, பிப். 1 ஆகிய இரண்டு நாள்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு நேரக் கணக்கெடுப்பும், ஞாயிற்றுக்கிழமை பகல்நேரக் கணக்கெடுப்பும் நடைபெற்றது.

இந்த வேட்டைப் பறவைகள் கணக்கெடுப்பு, வேட்டைப் பறவைகளின் இருப்பு, பரவல் நிலை மற்றும் வாழ்விட பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிா்காலத்தில் மேம்படுத்த உதவும் முக்கிய தரவுகளை வழங்கும் என்று அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல். சி.எப்.ஸ்ரீகாந்த் கூறினாா்.