முகப்பு
திருநெல்வேலி

சட்டக் கல்லூரியில் மருத்துவ முகாம்

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:36 PM
பகிர்:

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், வைகறை ஹோமியோபதி மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராமபிரான் சிறப்புரையாற்றினாா். மருத்துவா்கள் பியுலா நீலாவதி, சரவணன் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோா் அடங்கிய குழுவினா் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கினா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாராயணன், சண்முகசுந்தரம், இளையோா் செஞ்சிலுவை சங்க நிா்வாகி புவனேஸ்வரி, திருநீலகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.