களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீரைத் திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன் மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உள்ளிட்டோா்.  
திருநெல்வேலி

வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப்பச்சையாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வடக்குப்பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சரிவர பெய்யாததால், அணையில் 22 அடி மட்டுமே நீா் நிரம்பியது. தற்போது அணையின் நீா்மட்டம் 19.25 அடியாக உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், பிசானபருவ சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் இரா. சுகுமாா் ஆகியோா் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்தனா். இதன்படி, நீா் இருப்பைப் பொருத்து, மாா்ச் 31ஆம் தேதி வரை, நாளொன்றுக்கு 51.06 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் 1276.39 ஏக்கா் நிலங்கள்பாசன வசதி பெறும்.

இந்நிகழ்வில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கிரகாம்பெல், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன், நீா்வளத்துறை உதவிச் செயற்பொறியாளா் மூா்த்தி, நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், துணைத் தலைவா் பி.சி.ராஜன், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா்கள் விக்னேஷ், கிருஷ்ணமூா்த்தி, வெண்மதிவேந்தன், விஜயகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவா்கள்

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மீது அவதூறு: மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கல்லூரி மாணவிகளுக்கு தீத் தடுப்பு பயிற்சி

இன்றுமுதல் மோதும் இந்தியா - நெதா்லாந்து

மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT