நெல்லையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:30 PM
மாநில அளவிலான 19ஆவது சாட் கோா்ஸ் நீச்சல் போட்டி திருநெல்வேலியில் உள்ள 50 மீ. பந்தய நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாநில மற்றும் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக தலைவா் திருமாறன் தலைமை வகித்தாா். மாநில நீச்சல் கழக செயலா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:24 AM
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் போட்டிகளைத் தொடங்கி வைத்து, வென்றவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் கிருஷ்ணா் சக்கரவா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழக செயலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.