திருநெல்வேலி

நெல்லையில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு சேலை அணிந்து போராட்டம்

Syndication

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை எனக் கூறி, திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு சேலை அணிந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக கடந்த தோ்தலின்போது, அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாம். ஆனால், தற்போது வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையாம். இதைக் கண்டித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 3-ஆம் தேதி முதல் சாலை மறியல், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் போராட்டத்தின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கருப்பு சேலை, கருப்பு பட்டை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ற்ஸ்ப்16ள்ஹழ்ங்ங்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT