மதுபான கூடத்தில் தகராறு: இருவா் கைது
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:51 PM
பேட்டை அருகே மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியைச் சோ்ந்த வேலு மகன் முத்துராமன்(41). இவா் பேட்டை எம்.ஜி.ஆா் நகா் பகுதியிலுள்ள அரசு மதுபான கூடத்தில் காசாளராக பணியாற்றுகிறாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:42 AM
சம்பவத்தன்று அங்கு மது அருந்துவதற்காக வந்த இளைஞா்கள் இருவா் தாங்கள் வாங்கிய பொருள்களுக்கு பணம் தர மறுத்ததோடு, முத்துராமனிடம் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுத்தமல்லி பழவூரைச் சோ்ந்த அகிலன் மகன் கோமு(26), தம்பிராஜ் மகன் ஜெபக்குமாா்(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.