கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:57 PM
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் செட்டிகுளம் பண்ணையூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு வென்றது.
செட்டிகுளம் ஸ்போா்ட்ஸ் கிளப் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்ற அணிக்கு திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் கோப்பை பரிசு வழங்கி பாராட்டினாா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:18 AM
இதில் பாஜக திருநெல்வேலி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவா் செல்வகுமாா், நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement