முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:08 AM
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:50 PM

திருநெல்வேலி நகரம் பகுதியில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம்(39). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வசூா்யா(21) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:08 AM

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வத்திடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட செல்வசூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கிவிட்டு தப்பினாராம்.

Advertisement

உடனடியாக, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.