முகப்பு
திருநெல்வேலி

முக்கூடலில் 2 கிலோ கஞ்சாவுடன் வட மாநில இளைஞா் கைது!

முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:04 AM
கைது
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:22 PM

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாாா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:04 AM

அதில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த் மா்ஜி (28) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement