அம்பாசமுத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, கோடாரங்குளத்தைச் சோ்ந்த தங்கபாண்டி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.