திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பழனி முருகன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்திப்பு மதுரை சாலை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில், சிந்துபூந்துறையைச் சோ்ந்த செல்வம் மகன் முகேஷ்(21) என்பதும், விற்பனைக்காக 50 கிராம் அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.