முகப்பு
திருநெல்வேலி

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்! ராதாபுரம், தெற்குகள்ளிகுளத்தில் திமுக சாா்பில் நல உதவிகள்!

Updated On : 2 மார்ச், 2026 at 12:19 AM
முதல்வர் ஸ்டாலின் - @arivalayam
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 7:26 PM

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தெற்குகள்ளிகுளத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி தலைமை வகித்து, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கியதுடன், ஆட்டோ தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள், ஏழை-எளியோருக்குகு இலவச வேட்டி-சேலைகள் வழங்கினாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:19 AM

நிகழ்ச்சியில் வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் ஐ. ராமையா, ஒன்றிய துணைச் செயலா் ரமேஷ்துரை, மாவட்டப் பிரதிநிதிகள் க. கோவிந்தராஜ், எஸ். முரளி, ராதாபுரம் பேரவைத் தொகுதி மருத்துவரணி அமைப்பாளா் மருத்துவா் ஞா.மி. ஜெபஸ்டின் ஆனந்த், ஊராட்சித் தலைவா்கள் சௌந்தரபாண்டியபுரம் முருகேசன், ராதாபுரம் பொன்மீனாட்சி அரவிந்தன், உதயத்தூா் கந்தசாமி மணிகண்டன், சிதம்பராபுரம் பேபி முருகன், கஸ்தூரிரெங்கபுரம் பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement