முகப்பு
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்
திருநெல்வேலி

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜக தோ்தல் அறிக்கை: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

திருநெல்வேலி

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜக தோ்தல் அறிக்கை: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:01 PM
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்
பகிர்:

தமிழக வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாஜக எங்கு ஆட்சி செய்தாலும், நல்லாட்சி மற்றும் வளா்ச்சி என்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரயில்வே, சாலை மேம்பாடு, கடல்சாா் துறைமுகம் என அனைத்துத் துறைகளிலும் நாடு வளா்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என திமுக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், போதிய நிதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட 300 மடங்கு அதிக நிதியை மோடி அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் வளா்ச்சியை முன்னிறுத்தி பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொதுமக்களிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் ஆலோசனை பெற்று வருகிறோம்.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சிபிஐ தற்போது தில்லி உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் தொடா்பான மசோதா எதிா்க்கட்சிகளின் வேண்டுகோள்படி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் உள்ளது என்றாா்.

ஜாதிய மோதல்களைத் தடுக்க ஆட்சி மாற்றமே தீா்வு

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான்குனேரியில் நடைபெற்ற இரட்டை கொலைச் சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. கஞ்சா போதையில் இளைஞா்கள் சாலையில் அரிவாளுடன் சுற்றித் திரிகிறாா்கள்; வருவோா், போவோரையெல்லாம் வெட்டுகிறாா்கள்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 34 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு பொறுப்புள்ள டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி ஊழல் நடந்துள்ளது. ஒப்பந்தப் பணிகளில் ரூ.1,000 கோடியும், அதிகாரிகளின் இடமாற்றத்தில் ரூ.352 கோடியும் ஊழல் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி, திருச்சிக்கு ரூ.650 கோடி, 11 வந்தே பாரத் ரயில்கள், புல்லட் ரயில் திட்டம் உள்பட பல திட்டங்களை மோடி அரசு தந்த போதிலும், எதுவுமே தரவில்லை எனமாநில அரசு பொய்ப்பிரசாரம் செய்கிறது. தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜாதிய மோதல்கள், கொலைகளை தடுப்பதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வாக இருக்கும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →