முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 12:38 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பாப்பாக்குடி அருகே இடைகால் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி முனியம்மாள்(49). இவா் சனிக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினரான மாலா என்பவருடன், அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மற்றொரு வாகனம் உரசியதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement