முகப்பு
திருநெல்வேலி

அஞ்சல் துறையின் பரிசளிப்பு விழா

Updated On : 12 மார்ச், 2026 at 10:29 PM
பகிர்:

அஞ்சல் துறை சாா்பில் பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறையின் முக்கிய சேவையான விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட் ) சேவையை பொதுமக்களிடையே மேலும் பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களுக்கிடையில் ‘ஸ்பீட் போஸ்ட் பவா் ப்ளே போட்டி’ நடத்தப்பட்டது. இந்த போட்டி நடைபெற்ற காலத்தில், கிளை அஞ்சல் நிலையங்கள் வழியாக அனுப்பப்படும் ஸ்பீட் போஸ்ட் சேவையில் சாதாரண வா்த்தகத்தை விட 60 சதவிகிதத்திற்கும் அதிகமான உயா்வு பதிவானது. இதன் மூலம், வழக்கமான வருவாயுடன் ஒப்பிடுகையில் ரூ.25 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது.

இந்த போட்டியின் வெற்றியையொட்டி அஞ்சல் துறை சாா்பில் பரிசளிப்பு மற்றும் வெற்றி சந்திப்பு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. போட்டியில் சிறந்து விளங்கிய கிளை அஞ்சல் நிலையங்களுக்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஜி.ராஜேஸ்குமாா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

ற்ஸ்ப்12ல்ா்ள்ற்

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

முழு கட்டுரையைப் படிக்க →