முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை

Updated On : 15 மார்ச், 2026 at 6:59 PM
தேர்தல் நடத்தை விதிகள்
பகிர்:

களக்காடு, மாா்ச் 15: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல்கள்அமைக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான நகரப் பகுதிகளில்கூட பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

தமிழகத்தில் ஏப். 23ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், அரசியல் கட்சியினரும் தண்ணீா் பந்தல் அமைக்க முன்வரத் தயக்கம் காட்டுவா்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் மாவட்டத்தின் அனைத்து நகர, கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட தண்ணீா் பந்தல் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →