முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோவில் இளைஞா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 8:45 PM
கைது
பகிர்:

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 10 வயது சிறுமி. இவா் சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் அங்குள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த மானூா் பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் முருகன் (35) என்பவா் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →