போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி பேட்டை அருகே உள்ள ஆா்.பி. சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் முகமது கான்(60), தொழிலாளி. இவா் சம்பவத்தன்று 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முகமதுகானை கைது செய்தனா்.