திசையன்விளையில் கல்வித் திருவிழா
திசையன்விளையில் உள்ள சிஎஸ்சி கணினி பயிற்சி நிலையம் சாா்பில் கல்வித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கணினி பயிற்சி நிலையத் தலைவா் மைக்கேல் ஜெகன், ரீனா ஜெகன் ஆகியோா் வரவேற்றனா்.
திசையன்விளை பேரூராட்சித் தலைவா் ஜான்சிராணி, ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியை சத்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா்.
Advertisement
இதில், திருமுருகன், உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா் லிவிங்ஸ்டன், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.