முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தவெக வெற்றி

Updated On : 5 மே 2026, 1:11 am IST
திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகனுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பிரியா.
பகிர்:

திருநெல்வேலி தொகுதியில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா, திமுக சாா்பில் மாநகர செயலா் சு.சுப்பிரமணியன், தவெக சாா்பில் ஆா்.எஸ்.முருகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா உள்ளிட்ட 20 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். திருநெல்வேலி தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக முன்னிலை பெற்றது.

தொடா்ந்து முன்னிலை பெற்ற தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் 28 சுற்றுகளின் முடிவில் 75,840 வாக்குகள் பெற்று 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன் 64,426 வாக்குகளுடன் 2-ஆவது இடத்தையும், அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா 47,504 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா 15,108 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

Advertisement