கன்னியாகுமரி

லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா இன்று தொடக்கம்

DIN

கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது.
இதையொட்டி பகல் 12 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7.30 மணி முதல் விநாடி-வினா, பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும். இரவு 9.15 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் நாள் விழாவான மே 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு கடல் தீர்த்தம் எடுத்து வருதல், அதிகாலை 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை ஆகியன நடைபெறும்.
பூக்குழி: 3-ஆம் நாள் விழாவான மே 2-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 12.15 மணிக்கு அம்மனுக்கு பூப்படைப்பு, உச்சிக் கொடைவிழா நடைபெறும். மாலை 6 மணிக்கு பூக்குழி அமைத்தல், இரவு 7.30 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, அதிகாலை 1 மணிக்கு அம்மன் பூக்குழி இறங்குதல் ஆகியன நடைபெறும்.
4-ஆம் நாள் விழாவான மே 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு ஸ்ரீ சேர்வைக்கார சுவாமிக்கு அலங்கார பூஜை, இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து, அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு பூஜை ஆகியன நடைபெறும். 5-ஆம் நாள் விழாவான மே 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT