கன்னியாகுமரி

நாகர்கோவிலில் நாளை ராஜகோகிலா அறக்கட்டளை ஐம்பெரும் விழா

DIN

நாகர்கோவில் ராஜகோகிலா அறக்கட்டளையின் 13 ஆவது ஆண்டு விழா, தென்குமரி நூலகத் திறப்புவிழா, மாவட்ட அளவில் பல்துறை வித்தகர்களுக்கு பரிசளிப்பு, சிறந்த சமூக சேவை நிறுவனங்களுக்கு பாராட்டு, மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிக்கு விருது, நூல் வெளியீடு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் ஆக. 14 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. அறக்கட்டளைத் தலைவர் எஸ்.ராஜகோபால் தலைமை வகிக்கிறார். மருந்துவாழ்மலை மனிதவள மேம்பாட்டு தியான மன்ற நிறுவனர் பழநிசுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மைய அமைப்பாளர் பி.சந்திரஹாசன், மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் பி.செண்பகசேகரபிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக அ.விஜயகுமார் எம்.பி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.முகமதுஇஸ்மாயில், கோட்டாறு மறைமாவட்ட முதன்மைச் செயலர் ஜி.பெலிக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
தென்குமரி நூலகத்தினை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பத்மநாபபிள்ளை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில், தமிழக அளவில் மிகச்சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்ட சோ.சத்தியசீலன் எழுதிய இலக்கியம் பேசும் இலக்கியம் என்றநூலுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
பின்னர், தூத்துக்குடி வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவின் தலைவர் கீழப்பாவூர் ஆ.சண்முகையா எழுதிய திருமந்திரத் தமிழமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம் நூலினை, நாகை மாவட்டம், திருப்புகலூர், வேளாக்குறிச்சி ஆதீன திருமடம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.முகமதுஇஸ்மாயில், கோட்டாறு மறைமாவட்ட முதன்மைச் செயலர் ஜி.பெலிக்ஸ் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT