கன்னியாகுமரி

கொட்டாரத்தில் வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

கொட்டாரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொட்டாரம் கல்லூரிச் சாலையைச் சேர்ந்தவர் முகேந்திரன். இவர் கன்னியாகுமரிஅரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகளை மனைவியின் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு பணிக்கு சென்றாராம்.
ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்ததை கண்டாராம். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 2.5 பவுன் தங்கநகை மற்றும் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து  மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: முதல்வா் சித்தராமையா

திருச்சியில் 124 சுற்று வாக்கு எண்ணும் பணிக்கு 1,627 போ்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளரிடம் வழிப்பறி

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

SCROLL FOR NEXT