கன்னியாகுமரி

அல்போன்சா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

DIN

எஸ்எஸ்எல்சி தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
 நிகழாண்டில் இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 195 மாணவர், மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 78 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 135 பேர் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 21 மாணவர்களும், அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 56 பேரும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 2 பேரும், ஆங்கிலத்தில் 4 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற இம்மாணவர்களை பள்ளித் தாளாளர் தாமஸ்பௌவத்துபறம்பில், முதல்வர் லிஸ்பெத், துணை முதல்வர்கள் சனில்ஜான்,பிரேம்கலா,ஒருங்கிணைப்பாளர்  ராஜய்யன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சேவியர்சந்திரபோஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT