கன்னியாகுமரி

குமரி மாவட்டம் 98.17 சதவீத தேர்ச்சி: கல்வி மாவட்ட அளவில் குழித்துறை முதலிடம்

DIN

எஸ்எஸ்எல்சி தேர்வில் குமரி மாவட்டம் 98.17 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கல்வி மாவட்ட அளவில் குழித்துறை 98.48 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 12,620 மாணவர்கள், 12,651 மாணவிகள் என மொத்தம் 25,271 பேர் எழுதினர். இதில் 12265 மாணவர்களும், 12544 மாணவிகளுமாக 24809 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில், மாணவர்கள் 97.19 சதவீதம் பேரும், மாணவிகள் 99.15 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விழுக்காடு 98.17 சதவீதம் ஆகும்.
குழித்துறை கல்வி மாவட்டத்தில் 3914 மாணவர்கள், 4060 மாணவிகள் என மொத்தமாக 7974 பேர் தேர்வு எழுதினர். இதில் 3824 மாணவர்களும், 4029 மாணவிகளுமாக 7853 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 98.48 ஆகும். தக்கலை கல்வி மாவட்டத்தில் 4564 மாணவர்களும், 4490 மாணவிகளுமாக 9054 பேர் தேர்வு எழுதினர். இதில் 4454 மாணவர்களும், 4459 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 98.44 ஆகும்.  நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 4142 மாணவர்கள், 4101 மாணவிகள் என மொத்தம் 8243 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 3987 மாணவர்களும், 4056 மாணவிகளுமாக மொத்தம் 8043 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 97.57 ஆகும்.
இம் மாவட்டத்தில் 131 அரசுப் பள்ளிகள், 122 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 422 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் தமிழில் 4 பேரும், கணிதத்தில் 450 பேரும், அறிவியலில் 702 பேரும், சமூக அறிவியலில் 1637 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT