கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

DIN

குமாரகோவில் நூருல் இல்ஸாம் (என்.ஐ.) பல்கலைக்கழகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு  உறுதிமொழியேற்பு  மற்றும் பொதுக்கூட்டம்  பல்கலைக்கழக வளாகத்தில்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
பல்கலைக்கழக  நாட்டு நலப்பணி திட்டம், மக்கள் தொடர்புத்துறை, அரசு ஆரம்ப சுகாதாரதுறை, மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் ஆகியவற்றின் சார்பில்  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை பல்கலைக்கழக  துணை வேந்தர் ஆர். பெருமாள்சாமி தொடங்கிவைத்தார். இதில்  பதிவாளர் திருமால்வளவன், நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முருகன்,  மக்கள் தொடர்பு அலுவலர் ராமதாஸ், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, பொதுக்கூட்டத்தில் எடுத்த  முடிவின்படி,  பல்கலைக்கழக  மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச்  சென்று டெங்கு  விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.
கொசு உற்பத்தி , அதை தடுக்கும் முறைகள், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் கையாளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT