கன்னியாகுமரி

இறைச்சி கழிவுகளுடன் வந்த லாரி: கேரளத்துக்கு திருப்பி அனுப்பிய போலீஸார்

DIN

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளுடன் வியாழக்கிழமை இரவு குமரி மாவட்டம் வந்த லாரியை போலீஸார் குழித்துறையில் மடக்கிப் பிடித்து கேரளத்துக்கு திருப்பி அனுப்பினர்.
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீஸார், வியாழக்கிழமை இரவு குழித்துறை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,  கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளுடன் வந்த லாரியை தடுத்து நிறுத்தி, அந்த லாரியை கேரளத்துக்கே திருப்பி அனுப்பினர்.
கேரளத்திலிருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க,  மாவட்ட எல்லையோரப் பகுதியில் உள்ள 35 சோதனைச் சாவடியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில்,  எல்லையோர சோதனைச் சாவடிகளை கடந்து இம்மாவட்டத்துக்குள் லாரி எப்படி வந்தது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT