கன்னியாகுமரி

சாலையில் தேங்கிய மழைநீர்: ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஊழியர் மீது தாக்குதல்

DIN

குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த பேரூராட்சி பணியாளர்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளிக்கிழமை தாக்கினர்.
திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சாலையோர வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானம் கட்டியுள்ளாராம். இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் சாலையில் தேங்கி நின்று சாலை சேதமைடைந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதிக்கு வந்தனர். அப்போது வடிகாலை ஆக்கிரமித்து கட்டியுள்ள தனிநபருக்கும் பேரூராட்சிப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேரூராட்சிப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT