முகப்பு
கன்னியாகுமரி

ஏப். 23இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குமரி மாவட்ட   முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.23)  நடைபெறுகிறது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:59 am IST
பகிர்:

குமரி மாவட்ட   முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.23)  நடைபெறுகிறது.
இது குறித்து  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் மரணமடைந்த படைவீரர்களின்  மனைவியருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  திங்கள்கிழமை (ஏப்.23) நண்பகல் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, இம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் நேரில் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.