கன்னியாகுமரி

கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்

DIN

கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில்  கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
  மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு  மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலர் நாகேஸ்வரகாந்த் முன்னிலை வகித்தார். 
குமரி மாவட்டத்தில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும்,  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத் தீர்மானங்களை அமல்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொருளாளர் ஈஸ்வரி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், துணைச் செயலர் விஜின், இணைச் செயலர் சிபுகுமார், சிவகுமார், ஆன்றனி, செந்தில்கார்த்திகேயன் உள்பட திரளானோர்
கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT