கன்னியாகுமரி

குருசுமலையில் ஆலோசனைக் கூட்டம்

DIN

குருசுமலையில் திருப்பயண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குருசுமலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குருசுமலை இயக்குநர் வின்சென்ட் கே. பீட்டர் தலைமை வகித்தார். அருமனை பாக்கியபுரம் பங்குப் பணியாளர் மரிய வின்சென்ட் முன்னிலை வகித்தார்.
2019ஆம் ஆண்டு குருசுமலை திருப்பயணத்தை மார்ச் 31 முதல் ஏப். 7ஆம் தேதி வரையும்,  ஏப்ரல் 18,19 ஆகிய தேதிகளில் புனித வெள்ளி திருப்பயணம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. திருப்பயணத்திற்கென 501 பேர் கொண்டு பல்வேறு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் பாதுகாவலராகவும், வின்சென்ட் கே. பீட்டர் பொது ஒருங்கிணைப்பாளராகவும், அருள் பணியாளர்கள் பென்னி லூக்காஸ், சிரிஸ் ஹாரிஸ், ஜான் பிரிட்டோ ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும்,  சி.கே. ஹரிந்தீரன் எம்எல்ஏ, விஜயதரணி எம்எல்ஏ ஆகியோர் திருப்பயண குழுத் தலைவர்களாகவும், ராஜேந்திரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயந்தி செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT