முகப்பு
கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரத்தில் நாளை சிறப்பு மனுநீதித் திட்ட முகாம்

அழகியபாண்டியபுரத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஜூலை 25)  நடைபெறுகிறது.

Updated On : 24 ஜூலை 2018, 12:50 am IST
பகிர்:

அழகியபாண்டியபுரத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஜூலை 25)  நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தோவாளை வட்டம்,  அழகியபாண்டியபுரம்  பேரூராட்சி பகுதிக்கான மனுநீதித் திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி குறத்தியறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அழகியபாண்டியபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஜூன்14  ஆம் தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த  வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments