நாகர்கோவிலில் சிவாஜி படத்துக்கு மாலை அணிவிப்பு
நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அலங்கரித்து
நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் அசோக்ராஜ், காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, மாவட்ட பிரபு மன்றத் தலைவர் ஜெயபாலன், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கண்ணன், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மகேஷ் லாசர், சிவகுமார், மணவை லாரன்ஸ், ராஜதுரை, ஜான் போஸ்கோ, சிறுபான்மை பிரிவு ஜாகீர் உசேன், சனா கான், அருகுவிளை கண்ணன், மாதவன்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.