கன்னியாகுமரி

இரணியல் அருகே அனுமதியின்றி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: 40 பேர் மீது வழக்கு

DIN

இரணியல் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம், இரணியல் அடுத்த வில்லுக்குறி சந்திப்பில், வியாழக்கிழமை மாலை குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ், துணைத் தலைவர் கிரைஸ்ட் ஜெனித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தலைவர் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT