கன்னியாகுமரி

பேச்சிப்பாறை,  திற்பரப்பில்  திடீர் மழை

DIN

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்பட அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீரென மிதமான சாரல் மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. 
மேல் கோதையாறு, கீழ்கோதையாறு,  பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், அருமனை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட மலையோரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதே வேளையில் பெருஞ்சாணி பகுதியில் லேசான தூறலுடன் மழை தணிந்து விட்டது. 
மழையின் காரணமாக கரையோரப் பகுதிகளில் வாடிக்கிடந்த வாழைகள், மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் புத்தெழுச்சி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT