கன்னியாகுமரி

குமரியில் சூறைக்காற்று: படகு சேவை ரத்து

DIN

கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக, விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சூறைக்காற்று வீசியது.  இதனால் முக்கடல் சங்கமம் பகுதியில் 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
சூறைக்காற்று காரணமாக வள்ளங்களில் மீன்பிடிக்கும் மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே தொழிலுக்குச் சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT