மேம்பாலம் அமைக்க ஆட்சேபம்: தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம்
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தக்கலையில் மேம்பாலம் அமைக்க ஆட்சேபம் தெரிவித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதனிடையே, பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மேம்பாலம் அமைந்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். எனவே, பாலம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி மணலி சந்திப்பில் இருந்து கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டது.
இதில், அமைப்பின் தலைவர் அ.ரேவன்கில், பொதுச்செயலர் வை.விஜயகோபால், கௌரவத் தலைவர் எப்.எஸ்.முபாரக், , பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் சண்முகம், செயலர் மோசஸ் ஆனந்த், தணிக்கையாளர் ஜாபர்சாதிக், நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள், பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.